தேனி: சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ

தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (30) என்பவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இது தொடர்பாக பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் அளித்த புகாரின் பேரில், பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்ச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி