பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த 30 நாட்களாக நீர்வரத்து முற்றிலும் இல்லாததால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, வெள்ள கெவி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அருவிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.