தேனி அருகே மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

தேனி அரண்மனைபுதூர் அருகே திருமலை நகர், பத்மாவதி நகர், எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவ்விதமும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு பேனர் வைத்து முற்றுகையிட்டனர். அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி