போடி: இருசக்கர வாகனம் மீது வேன் மோதி ஒருவர் பலி

போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி ஈஸ்வரன் (45), போடியிலிருந்து தேனி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். தீர்த்தத் தொட்டி முருகன் கோயில் அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வேன் ஓட்டுநர் விஜய் மீது பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி