பெரியகுளம் அருகே விபத்து ஒருவர் பலி

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த பரமன், திண்டுக்கல் குமுளி பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கண்ணன் என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியதில் பரமன் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தென்கரை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி