தேனி ஆட்டோ மீது பொலிரோ வாகன மோதியதில் ஒருவர் பலி

தேனி வீரபாண்டி தாடிச்சேரி சாலையில் கரட்டுப்பட்டி அருகே வினோத் பாண்டியன் ஓட்டி வந்த பொலிரோ வாகனம் ஒன்று ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் இருந்த பால்ராஜ், முத்துலட்சுமி, மலரம்மாள், முருகேஸ்வரி, தினேஷ் பிரசன்னா ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீரபாண்டி காவல்துறையினர் மே 15 அன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி