இந்த இசை போட்டியில் தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி , சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வந்த மைக் செட்டுகளை திறந்தவெளியில் அமைத்து பாடல்களை ஒலிபரப்பினார்கள். இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆயிரக்கணக்கான மைக் செட் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
அதிக தூரத்தில் மைக் செட் குழாய்களை அமைத்து எந்த மைக் செட்டில் இருந்து அதிக தெளிவான பாடல்களின் ஒலி கேட்கிறது என்பதை வைத்து வெற்றியாளரை தீர்மானம் செய்தார்கள். போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மைக் செட் உரிமையாளர்களுக்கு ரொக்க பணத்தை பரிசாக வழங்கினார்கள்.