போடி அருகே முள்ளம்பன்றி வேட்டையாடிய நபர் கைது

தேனி மாவட்டம் போடி அருகே, விவசாய நிலங்களில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தோளில் பை சுமந்து வந்த பெத்தமுத்து என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, அவரது பையில் வேட்டையாடப்பட்ட முள்ளம்பன்றி இருந்தது. இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் முள்ளம்பன்றியை பறிமுதல் செய்து, பெத்தமுத்துவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி