தேனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ தினத்தன்று பங்களா மேடு கட்டண கழிப்பறை அருகே குற்ற தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த நரசிம்மன் (32 வயது) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூபாய் 1200 மதிப்புள்ள எட்டு மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.