தேனி: மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பேட்டி

தேனி நகரில் நடைபெற்ற நமது மக்கள் முன்னேற்ற கழக மாநாட்டில், ஜெகநாத் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தங்களது கட்சிக்கு கணிசமான வாக்குகள் இருப்பதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் 10 முதல் 2 லட்சம் வரை வாக்கு வங்கிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும் என்றும், தங்களை மதித்து தகுதிக்கேற்ப சீட் வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி