உத்தமபாளையம்: பள்ளி வாகனங்கள் ஆய்வு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாக்களில் உள்ள 41 பள்ளிகளைச் சேர்ந்த 287 பள்ளி வாகனங்களை ஆர்.டி.ஓ சுந்தரராமன் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். பேருந்துகளில் அவசரகால வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் மற்றும் படிக்கட்டுகளின் உறுதித்தன்மை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விதிகளை மீறிய வாகனங்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, தகுதிச் சான்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி