கல்லாமை, கிரேப், மல்கோவா, இமாம் பசந்த், பங்கனபள்ளி, கிளி மூக்கு, சப்பட்டை, காதர், காளைப்பாடி போன்ற சுவை அதிகமுள்ள ஏற்றுமதி தரம் வாய்ந்த மா ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்தப் பகுதி மாங்காய், மாம்பழங்களுக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் அதிக மதிப்பு உள்ளதால் விலையும் அதிகமாகக் கிடைத்து வந்தது.
ஆனால், இந்த ஆண்டு மா விளைச்சல் கிடைத்த அளவுக்கு கொள்முதல் வர்த்தகம் நடைபெறவில்லை. வழக்கமாக கல்லாமை மாங்காய் கிலோ ஒன்றுக்கு 15 முதல் 20 வரை விற்ற நிலையில், இந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு ரூ. 4 முதல் 6 வரை மட்டுமே கேட்கப்பட்டதால் மாங்காய் வர்த்தகம் கடும் சரிவைச் சந்தித்துள்ளதால் மா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.