தேனியில் திமுக இளைஞரணி சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளத்தில் மாபெரும் கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களுக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் கோப்பைகளை வழங்கினார். திமுக நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.