போடி : கணவன், மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மனைவி

போடி சர்ச் தெருவைச் சேர்ந்த சத்தியபிரகாஷ் (27) என்பவரின் மனைவி ஜெனிசா, குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கணவர் வீட்டுக்கு வந்து, அவரது பெற்றோர் ஜேகோப், ஜெயப் பிரியா, சின்னம்மா முத்துமாரி ஆகியோருடன் சோ்ந்து பவுல்ராஜ், சத்தியபிரகாசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் ஜெனிசா உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி