போடி அருகே சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து, ஒரு லிட்டர் அளவு கொண்ட 41 சமையல் எண்ணெய் பொட்டலங்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு பூட்டப்பட்ட சத்துணவுக் கூடத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை மறுநாள் காலை கண்டறிந்த அமைப்பாளர் ஜமுனா, இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.