கேரள மாநிலம் மூணாறு அருகே வட்டவடை கோவிலூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (43) தனது மகள் அபிநயாவுடன் (19) குடும்பத்துடன் போடியில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். கோயிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு ஊர் திரும்ப புறப்பட்டபோது அபிநயாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஜெயச்சந்திரன் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அபிநயாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.