போடி இலவச மருத்துவ முகாம் தொடங்கி வைத்த நகர மன்ற தலைவர்

தேனி மாவட்டம் போடி சேனைத்தலைவர் சுதந்திர மஹாலில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் 19-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் எஸ். வெங்கடேஷ் குமார் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இந்த மருத்துவ முகாமில் போடி நகராட்சி சேர்மன் ராஜராஜேஸ்வரி சங்கர், மற்றும் நகராட்சி ஆணையாளர் பார்கவி, திமுக நகர கழக செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மருத்துவ முகாமை தொடக்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இலவச பொது மருத்துவ சிகிச்சைகளை செய்து கொண்டனர். மேலும் பொது மக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி