வீரபாண்டி கோயிலுக்கு வந்த இடத்தில் பைக் திருட்டு

தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (33), வீரபாண்டி தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோயிலுக்குச் சென்றார். திரும்பி வந்தபோது, வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி