தேனி மாவட்டம் வீரபாண்டி காவல் நிலையத்தில் தேனி 18-ம் கால்வாய் நீட்டிப்பு சிறப்பு உபகோட்டம், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அமுதா, தங்களது அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் உள்ளிட்ட 4 வாகனங்களில் உள்ள ரூ.8,000 மதிப்புள்ள 4 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக நேற்று (செப்.5) புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு வாகனங்களில் பேட்டரியை திருடியவர்களை தேடி வருகின்றனர்.