போடி: 12 மணி நேரத்திற்குப் பின் பத்திரமாக மீட்பு

தேனி மாவட்டம் போடி அருகே மேற்கு தொடச்சி மலைப்பகுதியில் கொழுக்குமலை எஸ்ட்டேட்டுக்கு சொந்தமான ஏலத்தோட்டமானது அத்தியூத்து பகுதியில் அமைந்துள்ளது. அதில் கூலி வேலை செய்து வரும் 11 பேர் நேற்று பெய்த கனமழை காரணமாக அத்தியூத்து ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றைக் கடக்க முடியாமல் ஏலத்தோட்டத்தில் தவித்த நிலையில், தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை ஏலத்தோட்டத்தில் ஆற்றை கடக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இன்று அதிகாலையில் போடி வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சாலை மார்க்கமாக 10 கி.மீ., தூரம் சென்று ஐந்து கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்து சென்று சிக்கியவர்களை 12 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர். மேலும் கனமழை எச்சரிக்கை இருப்பதால் மழைகாலங்களில் ஆற்றை கடந்து தோட்ட வேலைக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினரால் அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி