தேனி அருகே இளைஞர் மீது தாக்குதல்

தேனி பகுதியை சேர்ந்தவர் விஷ்வா (23). இவர் பைக்கில் சென்ற போது நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவர் நாயை திட்டி உள்ளார். இதனைக் கண்ட நாயின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் விஸ்வாவுடன் வாக்குவாதம் செய்து அவரை தாக்கி உள்ளனர். இதுகுறித்து விஷ்வா அளித்த புகாரின் பேரில் தேனி நகர் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி