தேனி மாவட்டம் போடியில், அதிமுக சார்பில் BLA2 பூத் ஏஜென்ட்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன், தேர்தல் பொறுப்பாளர் பாப்புலர் முத்தையா, தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மதுரை மேற்கு மாவட்ட தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சிங்க ராஜபாண்டியன் மற்றும் தண்டலை ஆனந்த ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டம் அதிமுகவின் தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.