தேனி: போடிநாயக்கனூரில், நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர் ஆரோசெல்வம் இல்ல விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இன்று வருகை தந்த பாரதிய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் கே. ஏ முருகனுக்கு, போடி நகர நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில அமைப்பாளரும், தேனி மாவட்ட பொதுச் செயலாளருமான எம். பி. எஸ் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.