தேனி மாவட்டத்தில் 648. 085 கிலோ கஞ்சா அழிப்பு

தேனி மாவட்டத்தில் 118 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 648.085 கிலோ கஞ்சா, திண்டுக்கல் சரக போதைப்பொருள் அழிப்பு குழுவிற்கு அனுப்பப்பட்டது. பின்னர், நாங்குநேரி பெருமாள்புரத்தில் உள்ள தனியார் பயோ மெடிக்கல் வேஸ்ட் மேலாண்மை நிறுவனத்தில் இந்த கஞ்சாக்கள் அழிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

தொடர்புடைய செய்தி