போடி வணிக வரித்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய செல்லையா (59) என்பவர், 2013ல் வியாபாரி ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை மண்டல வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக உள்ள செல்லையாவுக்கு, தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.