தேனி மாவட்டம் தேவாரம் அருகே கஞ்சா கடத்திய பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். தேவாரம் சமத்துவபுரம் பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, இரு சக்கர வாகனத்துடன் நின்றிருந்த நிவேதா, விக்னேஷ், சக்தி ஆகியோரை போலீஸார் சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா, ஐந்து கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் தேவாரம், சேலம், தர்மபுரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.