தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ராமநாதபுரம் கார்த்திக் மற்றும் தூத்துக்குடி அருண் தமிழ்ச்செல்வன் ஆகியோரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களின் பைகளை சோதனை செய்தபோது, 28.45 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.