ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (24) என்பவர் நேற்று முன்தினம் பந்தல் வேலை முடித்துவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவரது பைக் மீது மோதியதில் பாலமுருகன் படுகாயமடைந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.