தேனியில் பேரிகார்டில் பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், தேனி பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஈஸ்வரன், இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி - மதுரை சாலையில் பைக்கில் சென்றுள்ளார். திருமலாபுரம் விலக்கு அருகே சென்றபோது பேரி கார்டில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த ஈஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து க. விலக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி