தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டிபட்டி வனச்சரகம் சார்பில் இன்று உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பள்ளியில் பயிலும் 6 முதல் +2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற தலைப்பில் கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொண்டனர்.