கம்பம் மெயின் ரோட்டில் பெண்கள் சாலை மறியல்

கம்பம் ஏ கே ஜி திடல் அருகே, கேரளாவிற்கு வேலைக்குச் செல்ல அரசு பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவமறிந்து வந்த கம்பம் போலீசார், உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பெண்கள் மறியலைக் கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி