கம்பம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிட்ட ஜெகநாத் மிஸ்ரா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்னர் இன்று தனது சொந்த தொகுதியான கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.