தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி போலீசார் ரோந்து பணியின்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மாரிமுத்து மற்றும் கணேசன் ஆகியோரைச் சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கேரளா லாட்டரி சீட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் இருந்து 464 லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.