தேனியில் 100 -ஐ தொட்ட தக்காளி விலை

தேனி மாவட்டம் பெரியகுளம் சந்தையில் தக்காளி வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ₹70 ஆக இருந்த தக்காளி, தற்போது பெங்களூருவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 'சாகோ' ரக தக்காளி கிலோ ₹100 என விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 5 டன்னிற்கும் அதிகமாக தக்காளி விற்பனையாகும் சந்தையில் இந்த விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி