தேனி: பேருந்தில் 24 கிலோ கஞ்சா கடத்தல்; பெண் கைது

ஆந்திராவிலிருந்து தேனி வழியாக பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெரியகுளம் அருகே எண்டப்புளி பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவையிலிருந்து குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில், கூடலூரைச் சேர்ந்த முருகேஸ்வரி (50) என்பவர் 24 கிலோ 590 கிராம் கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி