தேனி: ரயில்வே துறையில் வேலை.. மோசடி செய்த இருவர்

சின்னமனூர் அருகே சித்தார்த்தன், ரமணன் ஆகியோரிடம், தாங்கள் ரயில்வே துறையில் வேலை செய்வதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் கூறி அரவிந்த், யுவராஜ் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இதற்காக மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரம் பெற்றுள்ளனர். வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் மோசடி செய்ததாக சித்தார்த்தன் அளித்த புகாரின் பேரில், தேனி மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் அரவிந்த், யுவராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி