ஆண்டிபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மதுபாலா (17), கணிதப் பாடத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மன வருத்தமடைந்து, கடந்த 8-ஆம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த அவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.