தேனி: பைக்குகள் மோதல்; மூவர் பலத்த காயம்

பெரியகுளம் அருகே கிருஷ்ணசாமி (36) என்பவர், தனது மனைவி முருகேஸ்வரி மற்றும் மகன் பிரவீனுடன் திங்கள்கிழமை தேனிக்கு இருசக்கர வாகனத்தில் கண் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். லட்சுமிபுரம் புறவழிச் சாலையில் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், கிருஷ்ணசாமி, முருகேஸ்வரி, பிரவீன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்கரை போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி