திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருக்காளாத்தீஸ்வரர் ஞானம்பிகை திருக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு, இன்று ஞானம்பிகை அம்மன் மஞ்சள் பட்டுடுத்தி திருக்காளத்தீஸ்வரருடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். "நமசிவாய" கோஷங்கள் முழங்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர். தேர், உத்தமபாளையம் பகுதியின் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்தது.

தொடர்புடைய செய்தி