தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு கள்ளர் பள்ளியில் தற்காலிக பணியாற்றி வரும் ஆசிரியை மகாலட்சுமி மற்றும் பாலமுருகன், நாகேந்திரக்குமார் ஆகியோர் தேனி மாவட்டத்தை சேர்ந்த 24 பேரிடம் ரூ. 1.37 கோடி பெற்று கொண்டு அரசு வேலை வாங்கி தருவதாக போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்தனர். இந்த வழக்கில் பாலமுருகன், நாகேந்திரக்குமார் ஆகியோர் ஏற்கனவே குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட மகாலட்சுமியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.