தேனியில் திடீர் சாலை மறியல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பெரியகோம்பையைச் சேர்ந்தவர் ஜெயப்பிரியா(23) விற்கு கடந்த புதன்கிழமை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறகு குடும்ப கட்டுப்பாடு செய்ததில் அவருக்கு ரத்தப்போக்கு நிற்காமல் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் தேனி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி