ஆண்டிபட்டி வட்டத்தில் கன்னியப்பிள்ளைபட்டி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் பொது மக்கள் அதிகமாக கூடும் கோயில் பகுதிகளில் அதிகமாக குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பை உள்ள இடங்களை தூய்மை படுத்த வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.