தேனி - ஆண்டிபட்டி கணவாய் பிரிவு அருகே நேற்று (பிப்ரவரி 21) மதுரை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.