தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை மின் வாரிய அலுவலகத்தில் இன்று (ஜூன். 16) மின் கணக்கீட்டாளர்கள், வயர்மேன்கள் மற்றும் பணியாளர்கள் மின் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் மின் மாற்றி அமைப்பின் போது பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தி பணிபுரிய வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.