கம்பம் அருகே மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு

தேனி மாவட்டம் கம்பம் காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே கால்நடை வளர்ப்பு பகுதியில் மலைப்பாம்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் பணியினர் மற்றும் வனத்துறையினர் மலைப்பாம்பைப் பத்திரமாகப் பிடித்து, அருகில் உள்ள வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி