டெல்லி காவல்துறையின் அடாவடித்தனத்தை கண்டித்து தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் மற்றும் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் முழக்கமிட்டனர். இதில் மாவட்ட, நகரப் பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.