ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலையை கண்டித்து ஆர்பாட்டம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கானாவிலக்கு பகுதியில் உள்ள அரசு அண்ணா கூட்டுறவு நூற்பாலையை தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆலையில் 100 நிரந்தர ஊழியர்களும் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி