முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டிபட்டி அருகே உள்ள டி. சுப்புலாபுரம் கிராமத்தில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அசைவ உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு உணவு அருந்தினர். கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.