தேனி மாவட்ட நூலக ஆணைக் குழு மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து மைய நூலகத்தில் 58-வது தேசிய நூலக வார விழாவைக் கொண்டாடி வருகின்றன. விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியில், வையைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் புலவர் ச. ந. இளங்குமரன் கலந்துகொண்டு, நூல்களின் முக்கியத்துவங்கள் மற்றும் புத்தக வாசிப்பால் அறிவு திறன் மேம்படுவது குறித்து சிறப்புரையாற்றினார்.