தேனி மாவட்டம் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயில், லோயர் கேம்ப் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுசுவர் மற்றும் நுழைவு வாயில், லோயர் கேம்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் கன்னிகாளிபுரத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையம், வாரச்சந்தையில் நுழைவாயில்கள் உட்பட ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் எம்எல்ஏ நிதியிலிருந்து புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
நகராட்சி தலைவர் பத்மாவதி, கவுன்சிலர்கள், லோகங்களை முன்னிலையில் ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார். கமிஷனர் கோபிநாத், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.